ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடைவிதித்த ஐசிசி!
கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஜிம்பாப்வே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.இதற்கு காரணம் அரசியல் தலையிடு என பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்நாடு அரசு கலைத்தது. கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியை தேர்வு செய்து உள்ளது.இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் லண்டனில் நடந்த கூட்டத்தில் விவாதம் நடத்தியது.
கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையிட்டை ஏற்றுகொள்ள முடியாது என்பதால் ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை ஐசிசி விதித்து உள்ளது.இந்த தடையால் ஜிம்பாப்வே அணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ஐசிசி நடத்தும் எந்த விதமான போட்டியிலும் ஜிம்பாப்வே அணி கலந்து கொள்ள முடியாது என ஐசிசி தலைவர் ஷஷாங் மனோகர் கூறியுள்ளார்.