ICC june month Best players [file image]
ஐசிசி : சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மாதம் மாதம் சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து மரியாதையை செலுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த, ஜூன் மாதத்திற்கான ஐசிசி அறிவித்துள்ள சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய இந்திய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்றிருந்தனர். மேலும், நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரரான ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ்ஸும் தேர்வாகி இருந்தார்.
அதே போல ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைகளுக்கான விருதை வென்றவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் இலங்கை பெண்கள் அணியின் விஷ்மி குணரட்னே, இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணியின் மாயாபவுச்சியார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதில் கடந்த ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை ஜஸ்பிரீத் பும்ராவும், சிறந்த வீராங்கனைக்கான விருதை இந்திய பெண்கள் அணியின் ஸ்மிரிதி மந்தனாவும் வென்றுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றவர்களும், அதை வென்றவர்களும் இந்தியர்கள் என்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், அதனை வென்ற பும்ராவிற்கும் மற்றும் ஸ்ம்ரிதிக்கும் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையில் தொடருக்கான ஆட்டநாயகன் விருதை வென்ற ஜஸ்பிரீத் பும்ரா அந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி தொடரை வெல்வதற்கு ஒரு பெரிய பக்கபலமாய் அமைந்திருப்பார், அதன் அடிப்படையிலே பும்ராவிற்கு இந்த சிறந்த வேரறுக்கனா விருதும் வழங்கியுள்ளனர். அதே போல ஸ்மிரிதி மந்தனாவும் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரில் சிறப்பாகவே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…