எதிர்பார்ப்பில் ரசிகர்கள்… 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய லோகோ வெளியீடு…!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இதில், சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த சூழலில் தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசியின் டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது.
அதன்படி, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆர்வத்தை அதிகரிக்க அங்கு நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. இதுபோன்று, கனடா, ஆசிய கண்டத்திலிருந்து நேபாளம், ஓமன், கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து பப்புவா நியூ கினியா, ஐரோப்பாவிலிருந்து அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து நமீபியா, உகாண்டா ஆகிய நாடுகள் தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
Presenting the 2⃣0⃣ teams that will battle for ICC Men’s #T20WorldCup 2024 ????
✍: https://t.co/9E00AzjcRN pic.twitter.com/1nu50LOLWQ
— ICC (@ICC) November 30, 2023
இதற்காக தகுதி பெற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி, வீரர்கள் தேர்வில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான இலச்சினையை (லோகோ) ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி T20 உலகக் கோப்பைக்கான புதிய லோகோ ஒரு துடிப்பான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இந்த புதிய லோகோ, பேட், பந்து மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் ஆக்கப்பூர்வமான இணைவு ஆகும்.
அதாவது, சர்வதேச T20 கிரிக்கெட்டின் முக்கிய கூறுகளை இந்த லோகோ வெளிப்படுத்துகிறது. இந்த லோகோவை ஒரு வீடியோவாக தொகுத்து ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ‘பேட்டாக’ மாறும் T20 என்ற எழுத்துகள், அதை பந்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிப் பிரதிநிதித்துவம் வீசப்படும் ஒவ்வொரு பந்திலும் உள்ளார்ந்த துடிப்பான ஆட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
மேலும், அடுத்தாண்டு ஐசிசி உலகக்கோப்பை டி20 பெண்கள் தொடர் வங்கதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உலக கோப்பை டி20 தொடருக்கான லோகோவையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
Created from the three things that define T20I cricket – Bat, Ball, and Energy! ????
A striking new look for the ICC T20 World Cup ???? ???? ⚡️#T20WorldCup pic.twitter.com/kflsHr81eN
— ICC (@ICC) December 7, 2023