ஐசிசி சிறந்த வீரருக்கான விருது.. இடம்பெறாத இந்திய வீரர்கள்..!

Published by
murugan

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023-க்கான டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு மூன்று வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இந்த மூன்று வீரர்களில் ஒருவர் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார். ஆனால் ஐசிசியின் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று வீரர்களில் இந்திய அணியில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை.

ஐசிசி தனது இணையதளத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸ், வங்கதேசத்தை சேர்ந்த தைஜுல் இஸ்லாம், இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் – பிசிசிஐ அறிவிப்பு

பாட் கம்மின்ஸ்:

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்க்கு  2023-ம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அவர் கேப்டனாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றார். இப்போது டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தைஜுல் இஸ்லாம்:

தைஜுல் இஸ்லாமுக்கு டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி போட்டியை வெற்றி பெற செய்தார். அதே நேரத்தில், இரண்டாவது டெஸ்டிலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மேலும் அதிக விக்கெட்டுகளை (15) வீழ்த்தியதற்காக தொடர் ஆட்ட நாயகன் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய விளையாட்டு விருதுகள் விழா – முகமது ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது!

கிளென் பிலிப்ஸ்:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடினார். முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 42 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்டில், முதல் இன்னிங்சில் 72 பந்துகளில் 87 ரன்கள் வீழ்த்தி 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் இருந்தபோது பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 40* ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

 

Recent Posts

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

2 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

3 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

4 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

5 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

6 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

6 hours ago