“டியர் ஐசிசி, அவர் திரிமன்னே.. கருணாரத்ன இல்லை”- ஐசிசி செய்த தவறை குறிப்பிட்ட ரசிகர்!
ஐசிசி தனது ஃபேஸ்புக் பதிவில் திரிமன்னேவின் புகைப்படத்தை பதிவு செய்து, கருணாரத்னவை தவறாக டேக் செய்தது. இதனை பார்த்த கருணாரத்ன, “அது நான் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் லஹிரு திரிமன்னே இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதனை பாராட்டும் விதமான ஐசிசி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, “Precision. Elegance. Poise” என்று பதிவிட்டுள்ளது.
ஆனால் அவருக்கு பதிலாக, இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னவை டேக் செய்தது, ஐசிசி. இதனை ஒருவர், “டியர் ஐசிசி, அவர் திரிமன்னே.. கருணாரத்ன இல்லை” என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவை பார்த்த திமுத் கருணாரத்ன. “அது நான் இல்லை” என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து ஐசிசி, அந்த பதிவை நீக்கி, புதிதாக மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அந்தப்பதிவில் சரியாக லஹிரு திரிமன்னேவை டேக் செய்தது. இந்த பதிவிலும் ஒருவர், திமுத் ஒரு சிறப்பான வீரர் என்று கமெண்ட் செய்துள்ளார். ஐசிசியின் இந்த தவறையும், கருணாரத்னவின் இந்த கமண்டையும் ரசிகர்கள் அதிகளவில் பரப்பிவருகின்றனர்.
ICC ???? pic.twitter.com/0WvccCiJdN
— Wear Mask!???? ???????? (@RVCJ_FB) April 27, 2021