ஏழாம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன்காரணமாக மார்ச் மாதம் முதல் நடக்கவுள்ள அனைத்து விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது.
இதன்காரணமாக இந்தாண்டு இறுதியில் ஏழாம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த நிலையில், தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை இந்த போட்டிகள் நடைபெறவிருந்தது. ஆனால் உலகளவில் தற்பொழுது கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் காரணத்தினால், இந்த போட்டிகளை தள்ளிவைத்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் எனவும் இறுதிப் போட்டி வருகின்ற 2021 நவம்பர் 14-ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…