சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி), ஆன்லைனில் சூழ்ச்சியால் 2.5 மில்லியன் டாலர்கள் இழந்துள்ளதாக தகவல்.
ஆன்லைன் மோசடிகள் தற்போது உலகெங்கும் பெருகிவருகிறது. ஆன்லைனில் எளிதாக அனைவரும் ஏமாந்துவிடுகின்றனர். இதில் ஐசிசியும் விதிவிலக்கல்ல. ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஆன்லைன் மோசடிக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் ஐசிசி 2.5 மில்லியன் டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி) இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி இது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் ஐசிசி சமீபத்தில் இதுபோன்ற ஒரு ஆன்லைன் மோசடிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி போன்ற மிகப்பெரிய நிறுவனத்திற்கு கூட இந்த தொகை பெரியது.
இந்தத் தொகையானது, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு அசோசியேட் அணிக்கு வழங்கப்படும் நிதிக்கு சமமானதாகும். ஐசிசி இழந்த தொகையை மீட்க கோரி, தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…