ICC Ranking : இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார்.
அவரது சிறப்பான ஆட்டத்தால் ஐசிசி தரவரிசையில் மாற்றம் நிலவி உள்ளது. மேலும், அந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மானான ஜோ ரூட்டும் தரவரிசையில் இடம் மாறியுள்ளார். இந்த தொடரில் ஜெய்ஸ்வாலின் இரண்டு இரட்டை சதத்தால் இந்த மாற்றமானது நடந்துள்ளது. இதே போல இவர் அடுத்தடுத்து விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாள் முதலிடத்தில் வேகமாக பிடித்துவிடுவார் என கருதப்படுகிறது.
ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகும் போது டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்தார். அவர் அறிமுகம் ஆகும் போது இந்திய அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். என்னால் முடிந்த உழைப்பை இந்திய அணிக்காக கொடுப்பேன் என கூறி இருந்தார்.
தற்போது, அவர் சொல்லியதை உறுதி செய்யும் விதமாக 69-வது இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறி 12-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இது மிகப்பெரிய மாற்றமாகும். மேலும், இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார். இது இந்த டெஸ்ட் தொடரில் அவர் ஒரு சதம் மட்டுமே அடித்தார்.
மேலும், நியூஸிலாந்து வீரரான காணே வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவின் 22 வயதே ஆன இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் இந்த முன்னேற்றம் அவரை பின் தொடரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…