போட்றா வெடிய… சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?
ICC சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டி நடைபெற உள்ளது.
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளானது ஐசிசி தரவரிசையின் முதல் 8 இடங்களை பிடிக்கும் மனிதர்களுக்கு இடையே இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இது மினி உலக கோப்பை என அழைக்கப்படுகிறது.
1998ஆம் ஆண்டு முதல் இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பை காண போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதியாக 2013ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியானது, 2013 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டு இந்தியா சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. அதற்கு பிறகு அடுத்த ஆண்டு 2025 பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெறுகின்றன.
அடுத்த வருட சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் விளையாடாது என பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்ததால், இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
ஐசிசி தரவரிசையில், முதல் 8 இடம் கிடைத்த இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் விளையாடுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி முதலில் 50 ஓவர்கள் போட்டிகளாக தொடங்கப்பட்டு, பிறகு இடையில் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தற்போது 2025இல் நடைபெறும் இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 50 ஓவர் கொண்ட பகலிரவு ஆட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.
முதல் போட்டி, பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. மார்ச் 2ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அடுத்ததாக மார்ச் 4ஆம் தேதி முதல் அரையிறுதி ஆட்டம் துபாயிலும், மார்ச் 5ஆம் தேதி இரண்டாம் அரைஇறுதி ஆட்டம் பாகிஸ்தான் லாகூர் மைதானத்திலும், இறுதிப்போட்டியானது மார்ச் 9-ம் தேதி லாகூர் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தால் துபாயில் வைத்து இறுதி போட்டி நடைபெறும். மார்ச் 10ஆம் தேதி ரிசர்வ் நாள். அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியானது பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
குரூப் A : பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்
குரூப் B : தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து
போட்டி அட்டவணை :
பிப்ரவரி 19, பாகிஸ்தான் v நியூசிலாந்து, கராச்சி, பாகிஸ்தான்
பிப்ரவரி 20, பங்களாதேஷ் v இந்தியா, துபாய்
பிப்ரவரி 21, ஆப்கானிஸ்தான் v தென் ஆப்பிரிக்கா, கராச்சி, பாகிஸ்தான்
பிப்ரவரி 22, ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, லாகூர், பாகிஸ்தான்
பிப்ரவரி 23, பாகிஸ்தான் v இந்தியா, துபாய்
பிப்ரவரி 24, பங்களாதேஷ் v நியூசிலாந்து, ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 25, ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 26, ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர், பாகிஸ்தான்
பிப்ரவரி 27, பாகிஸ்தான் v பங்களாதேஷ், ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 28, ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர், பாகிஸ்தான்
மார்ச் 1, தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி, பாகிஸ்தான்
மார்ச் 2, நியூசிலாந்து v இந்தியா, துபாய்
மார்ச் 4, அரையிறுதி 1, துபாய்
மார்ச் 5, அரையிறுதி 2, லாகூர், பாகிஸ்தான்
மார்ச் 9, இறுதிப் போட்டி, லாகூர் (இந்தியா தகுதி பெறாவிட்டால், அது துபாயில் எப்போது விளையாடப்படும்)
மார்ச் 10, ரிசர்வ் நாள்