விதிமுறைகளில் மாற்றம்… ஐசிசி எடுத்த அதிரடி முடிவு! இனி கேட்டால் மட்டுமே….
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), முடிவு மறுஆய்வு செய்யும் டிஆர்எஸ் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்து அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தேவைப்படும் புதிய விதிமுறைகள் அல்லது ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களை ஐசிசி செய்வது வழக்கமான ஒன்று.
இதில், குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது முடிவு மறுஆய்வு (டி.ஆர்.எஸ்) முறை என்ற புதிய விதிகள் கொண்டு வரப்பட்டது. அதாவது, நடுவரின் முடிவை எதிர்த்து களத்தில் இருக்கும் வீரர்கள் 3வது நடுவரிடம் மறுஆய்வு செய்யக்கோரி அப்பீல் செய்யும் முறை தான் இந்த டிஆர்எஸ். அதன்படி, எல்பிடபிள்யூ, கீப்பர் கேட்ச் உள்ளிட்டவை குறித்து வீரர்கள் மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்) செய்வார்கள்.
எனினும், நடுவர் விக்கெட் கொடுத்தாலும் சரி, கொடுக்கவில்லை என்றாலும், விளையாடும் இருதரப்பிலும் சந்தேகம் இருந்தால் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்துவார்கள். அதுபோன்று கேட்கும்போது ஒருவேளை முடிவு நடுவருக்கு எதிராக வந்தால், அதாவது விக்கெட் என்று கொடுத்துவிட்டு, விக்கெட் இல்லை என்று தெரிய வந்தால் கள நடுவர், அவரது முடிவில் இருந்து பின்வாங்கி அவுட் அல்லது இல்லை என முடிவை அறிவிப்பார்.
ஐசிசி விருதுகள் 2023: சிறந்த வீரருக்கான பட்டியலில் 3 இந்தியர்களின் பெயர் பரிந்துரை..!
ஆனால், இதில் ஒரு குழப்பம் நீடித்து வந்தது. அதாவது, விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்து, அதற்கு லெக் சைட் நடுவரிடம் அப்பீல் கோரினால், அது 3வது நடுவருக்கு சென்று, அதனை 3வது நடுவர் கீப்பர் கேட்சையும் சோதனை செய்வார். அதன்பின்னர் ஸ்டம்பிங் சோதனை செய்வார். இது பவுலிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்து வந்தது. ஏனென்றால், ஸ்டம்பிங்-க்கு டி.ஆர்.எஸ் கேட்டு கேட்சசையும் சோதனை செய்யும்போது பவுலிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், டி.ஆர்.எஸ் என்ற விதிமுறைகளில் மாற்றம் செய்து ஐசிசி அறிவித்துள்ளது. இதனால், இனி வரும் காலங்களில் லெக் சைட் நடுவர் ஸ்டம்பிங் தீர்ப்புக்காக 3வது நடுவரிடம் முடிவை கொண்டு சென்றால், அங்கு லெக் அல்லது ஆஃப் திசையில் உள்ள கேமராக்களின் மூலமாக மட்டுமே சோதனை செய்யப்படும். கீப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டதற்கான சோதனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை கீப்பர் கேட்ச் வாங்கினாரா என பார்க்க விரும்பினால், அதற்கு அந்த அணி தனியாக ரிவ்யூ எடுக்க வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதுபோன்று, ஒரு பவுலர் பந்துவீசி கொண்டிருந்தபோது தலையில் காயமடைந்து கன்கஷன் விதியின் மூலம் வெளியேறினால், அவருக்கு பதிலாக வரும் வீரர் பவுலிங் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார். மேலும், ஒரு வீரர் காயமடையும் பட்சத்தில், களத்தில் அவருக்கு 4 நிமிடத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.