ICC Cricket WorldCup 2023 : நாளை மறுநாள் தான் கடைசி.. எப்போது அறிவிக்கப்படும் உலக கோப்பை இந்திய அணி.?

Indian Criket Team

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை அடுத்து, அடுத்து மிக முக்கிய ஐசிசி தொடரான ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்தாண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா தான் நடத்த உள்ளது என்பது நமக்கு தெரியும். ஆனால் தற்போது வரை இந்தியா சார்பில் விளையாடும் 15 பேர் கொண்ட அணி வீரர்கள் பட்டியலை இந்திய அணி அறிவிக்காமல் இருந்து வருகிறது. உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் , தங்கள் அணி வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் (நாளை மறுநாள்) அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

தற்போது வெளியான தகவலின் படி, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நாளை உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிடும் என கூறபடுகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கே.எல்.ராகுலுக்கு இந்த அணியில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல இன்னொரு கீப்பராக இஷான் கிஷான் இடம் பெறுவார் என்றும், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆசிய கோப்பையில் இடம் பெற்றுள்ள திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் அணியில் இடம் பெற மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ், அக்‌ஷர் பட்டேல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடங்கிய அணி அறிவிக்கப்படலாம் என உத்தேசிக்கப்படுகிறது.

வரும் அக்டோபர் 5ம் தேதி துவங்கும் உலக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நவம்பர் மாதம் 19ஆம் தேதி நிறைவடைகிறது. அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா என பல்வேறு மைதானங்களில் வரவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly