முக்கியச் செய்திகள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி… இந்தியா உட்பட 6 அணிகள் தகுதி…!

Published by
murugan

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் 2025-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் டாப்-8 அணிகள் பங்கேற்கும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவைத் தவிர தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதேசமயம் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி-க்கு நுழைந்துள்ளது.

இருப்பினும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு 6 அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு 3 அணிகள் போட்டியிடுகின்றனர்.

மீதமுள்ள 2 இடங்களுக்கான போட்டியில் 3 அணிகள்:

இந்த உலகக்கோப்பையின் முதல் 8 அணிகள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும். இருப்பினும், இந்த போட்டியில் எஞ்சிய 2 இடங்களுக்கு 3 அணிகள் போட்டியில் உள்ளன. இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இதற்கு போட்டியாக உள்ளன. நேற்று முன்தினம் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தியது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் இலங்கை அணியின் கனவு வீணானது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இலங்கை அணி தகுதியை இழந்துள்ளது.

இதனால் வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தும் போட்டியாளர்களாக உள்ளன. தற்போது இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் 8 இடங்களுக்குள் வந்தால் ஐசிசி சாம்பியன் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்து தவிர நெதர்லாந்து, வங்கதேசம் அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வங்கதேசம் நிகர ரன் ரேட்டில் இங்கிலாந்துக்கு கீழே உள்ளது. இது தவிர நெதர்லாந்து 4 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசியாக அதாவது பத்தாவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்றாலும் ஐசிசி சாம்பியன் போட்டிக்கு தகுதி பெறாது.

காரணம் நெதர்லாந்து அணி நாளை இந்திய அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது. அதே நேரத்தில் வங்கதேசம் அணி ஆஸ்திரேலியா அணியுடன் இன்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகிறது. வங்கதேசம், மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவினால் இங்கிலாந்து தகுதி பெறும்.

வங்கதேசம், மற்றும் நெதர்லாந்து அணிகள் தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடைப்படையில் ஐசிசி சாம்பியன் போட்டிக்கு வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து தேர்தெடுக்கப்படுவார்கள்.

Published by
murugan

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

6 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago