இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து உள்ளார்.அதிலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்து உள்ளார். கடந்த 2013 -ம் ஆண்டு சச்சின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் சச்சின் 1989-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.பின்னர் 1990 -ம் ஆண்டு அப்போது இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்று பயணம் செய்து விளையாடியது.அப்போது விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் 119 ரன்கள் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
அப்போட்டியில் இந்திய அணி டிரா செய்ய சச்சின் முக்கிய பங்கு வகித்தார்.17 வயதில் சச்சின் குறைந்த வயத்தில் சதம் அடித்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார்.தனது முதல் சதத்தை 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி அடித்தார்.
இந்நிலையில் ஐசிசி தனது ட்விட்டரில் நேற்று ஒரு பதிவை பதிவிட்டு உள்ளது. அதில் 1990-ம் ஆண்டு இதே நாளில் சச்சின் தனது 100 சதங்களில் முதல் சதத்தை அடித்தார் என பதிவிட்டு உள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டரில் நேற்று பக்கத்தில் 1990-ம் ஆண்டு இதே நாளில் உலகமே சச்சின் டெண்டுல்கர் முதல் சதத்தை பார்த்து ரசித்தது. 17வது வயது லிட்டில் மாஸ்டர் தன் முதல் சதத்தை பதிவு செய்தார் என பதிவிட்டு உள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…