நவம்பர் மாத ஐசிசி விருது! ஜோஸ் பட்லர், சிட்ரா அமீன் தேர்வு.!
ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான வீரர்களாக ஜோஸ் பட்லர், சிட்ரா அமீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐசிசி ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு சிறந்த வீரர் விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான விருது, ஆடவர்களில் இங்கிலாந்து டி-20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் மகளிர் பிரிவில் பாகிஸ்தான் அணியின் சிட்ரா அமீன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜாஸ் பட்லர், டி-20 உலகக்கோப்பையை பெற்றுத்தந்தவர் மற்றும் நவம்பரில் விளையாடிய 4 போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.
மகளிர் பிரிவில் சிட்ரா அமீன், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி 277 ரன்கள் குவித்தார் மேலும் ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோராக 176* ரன்களை அயர்லாந்துக்கு எதிராக பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.