T20 போட்டிக்கு புதிய ரூல்ஸ்- ஐசிசி அறிவிப்பு..!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 போட்டிகளுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது.
பொதுவாக டி20 போட்டியில் 90 நிமிடங்கள் நிறைவடையும்போது பந்து வீசும் அணி 20-வது ஓவரைத் தொடங்கியிருக்க வேண்டும். அப்படி விதியை கடைபிடிக்காத அணிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஐசிசி புதிய விதியை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு பந்து வீசினால் மீதமுள்ள ஓவர்களில் ஒரு பீல்டர் இன்னர் சர்க்கிளுக்கு வெளியே நிற்க முடியாது. அவர் இன்னர் சர்க்கிளுக்குள் நிற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஐந்து பீல்டர்கள் பவர்பிளேக்குப் பிறகு இன்னர் சர்க்கிளுக்கு வெளியே நிற்பார்கள். ஆனால் புதிய விதிகளின்படி, உதாரணமாக 19-வது ஓவர் தொடங்கும்போதே பந்து வீசும் அணி 90 நிமிடங்களை கடந்துவிட்டால் மீதமுள்ள ஒரு ஓவர்களிலும் இன்னர் சர்க்கிளுக்கு வெளியே ஒரு ஃபீல்டரை குறைத்து நான்கு பீல்டர்கள் மட்டுமே ஃபீல்டிங் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து இந்த விதி நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Changes to T20I Playing Conditions come into effect https://t.co/RevgbZWOAl via @ICC
— ICC Media (@ICCMediaComms) January 7, 2022