155 கி.மீ வேகத்தில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை – ஐசிசி அறிவிப்பு..!
பந்துவீச்சு முறை விதிகளுக்கு மாறாக பந்துவீசியதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்து வீச ஐசிசி தடை.
பாகிஸ்தான் அணியின் 21 வயது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறான பந்துவீச்சு நடவடிக்கையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஆல்-ரவுண்டர் வீரர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, ஜனவரி 21 அன்று லாகூரில் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு சோதிக்கப்பட்டது. இந்த டெஸ்டில் ஹஸ்னைனின் நடவடிக்கை சட்டவிரோதமானது என கண்டறியப்பட்டது. இதனால், அவர் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
லெங்த் பந்து, பவுன்சர், ஃபுல் லெந்த் பந்து வீசும்போது ஐசிசி நிர்ணயித்த 15 டிகிரி விதிகளை ஹஸ்னைன் மீறுகிறார். ஹஸ்னைனின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி கூறுகையில், 8 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் படைத்துள்ளார். அவர் 2019 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ல் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசி அசத்தினார்.
The 21-year-old has undergone extensive testing in Lahore since he was reported on January 2 ????https://t.co/xN7c7vLJ8C
— ICC (@ICC) February 4, 2022