இந்தியா பேட்டிங்கை சரி செய்து ஆஸ்திரேலிய வாங்க”இல்லை என்றால் “கோலிக்கு சேப்பல்”எச்சரிக்கை..!!
இந்திய அணி பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை சரி செய்துவிட்டு ஆஸ்திரேலிய பயணத்துக்கு வாருங்கள். இல்லாவிட்டால் எங்கள் நாட்டு அணியினர் உங்களைத் தண்டித்துவிடுவார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி 2019-ஜனவரி 18-ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் ஆஸ்திரேலியத் தொடர் இந்திய அணிக்கு எளிதாக இருக்காது, கடினமாக இருக்கும் என்றும் இந்திய அணி பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை களைவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பேட்டிங்கில் வலுவாக இருந்தால் மட்டுமே இந்திய அணி ஆஸ்திரேலிய பயணத்துக்கு துணிச்சலுடன் வர முடியும். ஏனென்றால், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எதிரணியை மிரளச் செய்யும் அளவுக்கு வலுவாக இருக்கிறது.
மேலும் இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இழந்து தன் மதிப்பை இழந்துள்ளது. இதை மீட்டெடுக்க ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு விளையாட நினைத்திருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய பயணம் எளிதானதாக இருக்காது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தொடர் பயணத்தை கோபக்கார கோலி எப்படி எதிர்கொள்வார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU