Nicholas Pooran [file image]
தி ஹன்ட்ரட் 2024 : ஹிட் பேட்டர்ஸ் லிஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு நிச்சியமாகவே ஒரு தனி இடம் என்பது இருக்கும். அந்த அளவுக்குஅவர் விளையாட்டு ஒவ்வொரு போட்டியிலும் அமைந்திருக்கும். அதன்படி விளையாடும் போட்டிகளில் ஆக்ரோஷமாக பந்துகளை சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு வாணவேடிக்கையை காட்டிக்கொண்டு இருக்கிறார்.
அதற்கு ஒரு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தற்போது நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட் 2024’ லீக் தொடரின் 27-வது போட்டியில் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிக்கோலஸ் பூரன் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் இன்னிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் ருத்ர தாண்டவமான விளையாட்டை விளையாடினார். அந்த போட்டியில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களை விளாசி எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு பயத்தை காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும், ஸ்காட் கியூரி வீசிய 74-வது பந்தை அசுர வேகத்தில் விளாசி நிக்கோலஸ் பூரன் 118 மீட்டர் அளவுக்கு சிக்ஸர் அடித்தார். அவர் அடித்த அந்த பந்தை பார்த்த ரசிகர்கள் எம்மாடியோ எவ்வளவு உயரம்? என்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த ரசிகர்களும் நிக்கோலஸ் பூரனை பாராட்டி வருகிறார்கள்.
போட்டியில் சிக்ஸர்கள் விளாசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன் ” இந்த போட்டியில் நன்றாக விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அடித்த அந்த பந்து பெரிய உயரத்திற்கு சென்று பார்வையாளர்களுக்கு மத்தியில் விழுந்தது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை போலவே செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவேன்” எனவும் கூறியுள்ளார்.
மேலும், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் இன்னிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினர். ஏழு போட்டிகளில் இது நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸின் நான்காவது வெற்றியாகும். அவர்களுடைய அடுத்த போட்டி ஆகஸ்ட் -13ஆம் தேதி லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…