ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் எந்த வரிசையில் களமிறங்க அணி நிர்வாகம் விரும்பினாலும் அந்த வரிசையில் மகிழ்ச்சியோடு பேட்டிங் செய்வேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றடைந்த கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், மீண்டும் அவர் டெஸ்ட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் காயங்களில் இருந்து மீண்ட ரோஹித் சர்மா, நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார் அதன்பின் பேட்டியளித்துள்ள அவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் நான் எந்த வரிசையில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் விரும்பினாலும் அந்த வரிசையில் மகிழ்ச்சியோடு பேட்டிங் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒருநாள் போட்டி, 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நடைபெறவுள்ள டி-20 தொடர், டிசம்பர் 4ஆம் தேதி 11ஆம் தேதி நடைபெறும் எனவும், நான்கு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…