சென்னை : இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அவரது ஓய்வை குறித்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருந்தார்.
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இவர் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றி கேப்டனாக இருக்கும் இவர் இந்திய அணியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இவர் ராசி இல்லாத ஒரு கேப்டனாகவே இருந்து வருகிறார்.
தற்போது, வருகிற டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா அணியின் கேப்டனாக செயலாற்ற உள்ளார். இதுதான் அவரது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் எனவும் இதன் பிறகு ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார் என்றும் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது.
தற்போது, ரோஹித் சர்மா அவர் ஓய்வு பெறுவதை பற்றி துபாய் ஐ 103.8 (Dubai Eye 103.8) என்ற வானொலி நிலையத்திற்க்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அவர் இதை பற்றி கூறுகையில்,”இந்த 17 வருட பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி உலகக்கோப்பைக்கு எனது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்று நம்புகிறேன்.
நம் நாட்டின் இந்தியா அணிக்காக கேப்டனாக இருப்பதை நான் கவுரவமாக நினைக்கிறேன். மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு நானும் ஒரு நாள் கேப்டனாக இருப்பேன் என ஒரு நாளும் நினைத்ததில்லை. மக்கள் சொல்வது போல நல்லவர்களுக்கு நல்லதே கிடைக்கும் என்பது உண்மைதான். அதே போல இந்திய அணியின் கேப்டனாக நான் பொறுப்பேற்றவுடன் இதை தான் என் அணியினரிடம் கூறுவேன்.
அது என்னவென்றால் ‘இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் இது தனிப்பட்ட ஒருவருக்காக மட்டும் அல்லமால் அணிக்காக விளையாட வேண்டும் அப்படி செய்தல் கோப்பை தட்டி தூக்கலாம்’ மேலும், நான் ஒரு மனிதனாக எனது வாழ்க்கையில் நிறைய ஏற்றம் இறக்கங்களை பார்த்துள்ளேன்”, என்று துபாய் ஐ 103.8 என்ற வானொலி நிலையத்திற்க்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…