‘இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன்’ ! ஓய்வை குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா !!

Rohit Sharma

சென்னை : இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அவரது ஓய்வை குறித்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருந்தார்.

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இவர் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றி கேப்டனாக இருக்கும் இவர் இந்திய அணியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இவர் ராசி இல்லாத ஒரு கேப்டனாகவே இருந்து வருகிறார்.

தற்போது, வருகிற டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா அணியின் கேப்டனாக செயலாற்ற உள்ளார். இதுதான் அவரது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் எனவும் இதன் பிறகு ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார் என்றும் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது.

தற்போது, ரோஹித் சர்மா அவர் ஓய்வு பெறுவதை பற்றி துபாய் ஐ 103.8 (Dubai Eye 103.8) என்ற வானொலி நிலையத்திற்க்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அவர் இதை பற்றி  கூறுகையில்,”இந்த 17 வருட பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி உலகக்கோப்பைக்கு எனது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

நம் நாட்டின் இந்தியா அணிக்காக கேப்டனாக இருப்பதை நான் கவுரவமாக நினைக்கிறேன். மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு நானும் ஒரு நாள் கேப்டனாக இருப்பேன் என ஒரு நாளும் நினைத்ததில்லை. மக்கள் சொல்வது போல நல்லவர்களுக்கு நல்லதே கிடைக்கும் என்பது உண்மைதான். அதே போல இந்திய அணியின் கேப்டனாக நான் பொறுப்பேற்றவுடன் இதை தான் என் அணியினரிடம் கூறுவேன்.

அது என்னவென்றால் ‘இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் இது தனிப்பட்ட ஒருவருக்காக மட்டும் அல்லமால் அணிக்காக விளையாட வேண்டும் அப்படி செய்தல் கோப்பை தட்டி தூக்கலாம்’ மேலும், நான் ஒரு மனிதனாக எனது வாழ்க்கையில் நிறைய ஏற்றம் இறக்கங்களை பார்த்துள்ளேன்”, என்று துபாய் ஐ 103.8 என்ற வானொலி நிலையத்திற்க்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்