அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தனர். இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இருவரும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்கள். இவர்களுக்கிடையே இருக்கும் நட்புறவை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்தாண்டு தோனி சிஎஸ்கே விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள் நிலையில் தோனி ஆடவில்லை என்றால் நானும் ஆடமாட்டேன் என ரெய்னா கூறியுள்ளார்.
இதுகுறித்து ரெய்னா பேசுகையில், இன்னும் சில ஆண்டுகள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். வருகின்ற ஐபிஎல் தொடர்களில் நான் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடுவேன். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன்.
அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன். நாங்கள் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் நாங்கள் வென்றால் அடுத்தாண்டு தோனி விளையாட நான் அவரை சமாதானப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…