எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துருக்கேன்! ஜஸ்பிரித் பும்ரா  அதிரடி பேச்சு!

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா  நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடுகிறார். கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக  அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்காலிகமாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தார்.

இந்நிலையில், தற்போது நீண்ட மாதங்களுக்கு பிறகு ஓய்வு பெற்று பயிற்சியகளை மேற்கொண்டு தயாராகியுள்ள பும்ரா இன்று மீண்டும் விளையாடவுள்ளார். அதன்படி, இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார் நீண்ட மாதங்களுக்கு பின் பும்ரா இந்திய அணிக்கு திரும்பிஉள்ளதால் அவர் எப்படி விளையாடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதனையடுத்து, போட்டி இன்று இரவு தொடங்கப்படவுள்ள நிலையில், பயிற்சி எடுத்துவரும் பும்ப்ரா மீண்டும் விளையாட வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய பும்ரா ” 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னாடி எப்படி சென்றேனோ அதே பும்ராவாக தான் இப்போதும் இருக்கிறேன். என் மீது எனக்கு அதிகமாக நம்பிக்கை இருக்கிறது.

நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பயிற்சி செய்துகொண்டிருந்த சமயத்தில் நிறைய வீரர்களை சந்தித்தேன். வீரர்களைச் சந்திப்பது நன்றாக இருந்தது. விளையாடமல் பயிற்சி செய்த காலகட்டத்தில் அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நான் பின்பற்றி கொண்டு தான் இருந்தேன்” எனவும் ஜஸ்பிரித் பும்ரா  தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா  ” நான் கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்த காலத்தில் கிரிக்கெட்டை மிகவும் மிஸ் செய்தேன். ஆனால் முன்னாடி எந்த அளவிற்க்கு உடற்தகுதியோடு விளையாடினேனோ அதே தகுதியுடன் இப்போது இருப்பதாக உணர்கிறேன். இவ்வளவு மாதங்கள் விளையாடாமல் இருந்ததால் பசியுடன் இருக்கிறேன். கண்டிப்பாக வரும் போட்டிகளில் நன்றாக அந்த பசிக்கு ஏற்றது போல விளையாடுவேன் ” எனவும் ஜஸ்பிரித் பும்ரா  தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் இந்த போட்டி துவங்க உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி துவங்கும். இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா  ஜெயல்படுகிறார் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் துணைக்கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

8 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

10 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

11 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

11 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

11 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

12 hours ago