ஒரு வருஷம் கொடுங்க..அர்ஜுனை சிறந்த பேட்ஸ்மேனா மாத்துவேன்..யோகராஜ் சிங் வேண்டுகோள்!
அர்ஜுன் டெண்டுல்கரிடம் சிறந்த பேட்டிங் செய்யும் திறமை இருக்கிறது என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரோட மகன் அர்ஜுன் டெண்டுல்கர், அப்பாவை போல தானும் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கிரிக்கெட்டில் தனக்கொரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். ரஞ்சி டிராபி தொடரில் இடது கை வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர் அதன்பிறகு தனது ரூட்டை மாற்றிக்கொண்டு பந்துவீச்சாளராக பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த சூழலில் அவரை பந்து வீச வைத்து அவருடைய திறமையை மறைக்க வேண்டாம் எனவும், அவரிடம் பேட்டிங் திறமை சூப்பராக இருப்பதாகவும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.
யோக்ராஜ் சிங் பயிற்சியில் அர்ஜுன் சாதனை?
இது குறித்து பேசிய அவர் ” அர்ஜுன் டெண்டுல்கருக்கு நான் கொஞ்ச நாள் ட்ரெயினிங் கொடுத்தேன். சரியாக சொல்லவேண்டும் என்றால் ஒரு 10 நாட்களில் இருந்து 12 நாள் ட்ரெயினிங் கொடுத்திருப்பேன். அப்புறம், அர்ஜுன் டெண்டுல்கர் கோவா டீம்க்காக ரஞ்சி ட்ராஃபில ஃபர்ஸ்ட் மேட்ச் ஆடி, ராஜஸ்தானுக்கு எதிரா ஒரு சதம் அடிச்சார். அந்த அளவுக்கு சிறப்பாக நான் பயிற்சி கொடுத்த காரணத்தால் அவரால் சதம் விளாச முடிந்தது. அந்த சதம் காரணமாக தான் அவருக்கு அடுத்ததாக ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது”என தெரிவித்தார்.
பயிற்சிக்கு என்னிடம் கொடுங்க
மேலும் தொடர்ந்து பேசிய யோகராஜ் சிங் ” நான் என்னுடைய மகன் யுவராஜ் சிங்கிடம் ஒரு முறை சொன்னேன் சச்சின் கிட்ட சொல்லு ஒரு வருடம் என்னிடம் அர்ஜுன் டெண்டுல்கரை என்னிடம் பயிற்சிக்காக அனுப்புங்கள் உலகில் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவரையும் ஒருவராக மாற்றி கொடுக்கிறேன் என்று சொன்னேன். ஏனென்றால், அவரிடம் பேட்டிங் திறமையும் இருக்கிறது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்..உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை…அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் எனவே, அவரை எதற்காக பந்துவீச வைத்து வீணாக்குகிறீர்கள்? எனவும் காட்டத்துடன் கேள்வி எழுப்பினார்.
மேலும், 2023 ஐபிஎல் சீசனில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருந்தார். பெரிய அளவில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதைப்போல, 2024 ஐபிஎல் சீசனில் ஒரே ஒரு போட்டியில் விளையாடிய அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக ஏலத்தில் மும்பை அணி அவரை முதலில் விடுவித்தது.அதன்பிறகு மீண்டும் 30 லட்சம் கொடுத்து எடுத்து என்பது குறிப்பிடத்தக்கது.