அக்தரின் சாதனையை முறியடிப்பேன் – உம்ரான் மாலிக்
கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக பந்து வீச்சாளர் என்ற அக்தரின் சாதனையை முறியடிப்பேன் என இந்திய வீரர் உம்ரான் மாலிக் நம்பிக்கை.
கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக பந்து வீச்சாளர் என்ற பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரின் சாதனையை முறியடிப்பேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தெரிவித்துள்ளார். நான் நன்றாக விளையாடினால், நான் அதிர்ஷ்டசாலி என்றால், நான் அவரின் சாதனையை முறியடிப்பேன்.
ஆனால் தற்போது நாட்டுக்காக சிறப்பாக செயல்படுவது பற்றி மட்டுமே யோசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். கடந்த 2003 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் மணிக்கு 161.3 கி.மீ வேகத்தில் பந்து வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.