நான் எப்போதும் தோனி ரசிகனாக இருப்பேன் – ஹர்திக் பாண்டியா

Hardik and MS Dhoni

தோனியை சாத்தான்களால் மட்டுமே வெறுக்க முடியும் என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி.

நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து, இன்று மாலை முதல் குவாலிபையர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. கடந்த சீசனில் இருந்து இதுவரை குஜராத்துடன் மோதிய 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால், இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்துமா என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இப்போட்டி குரு – சிஷியன் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இப்போட்டியை காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த சமயத்தில், தோனி குறித்து ஹர்திக் பாண்டியா பேசும் வீடியோ ஒன்றை குஜராத் டைட்டன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா, பெரும்பாலானவர்கள் எம்எஸ் தோனியை மிகவும் சீரியஸான நபர் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நான் அவரிடம் ஜாலியாக காமெடி சொல்லி, விளையாடுவேன். மேலும், அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

அது அனைத்தும் நேர்மறையானவை. அவருடன் நிறைய உரையாடியதை விட, வெறுமனே அவரை பார்த்து மட்டுமே நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர், சகோதரர். நான் எப்போதும் தோனி ரசிகனாக இருப்பேன், அவரை சாத்தான்களால் மட்டுமே வெறுக்க முடியும் எனவும் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி இடையிலான பிணைப்பு குறித்து சொல்லவே வேண்டாம். அதனை பலமுறை களத்தில் நாம் நேரடியாக பார்த்துள்ளோம். இந்த சூழலில் ஹர்திக், தோனி குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். மேலும் குஜராத் அணி ட்விட்டரில் Captain, Leader, Legend, எம்எஸ் தோனி ஒரு emotion என்று பதிவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்