Rishab Pant [file image]
ரிஷப் பண்ட் : தனது கஷ்டமான காலத்தில் நடந்த கசப்பான சில அனுபவங்களை ஷிகர் தவானுடன் பகிர்ந்திருந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி அன்று இந்தியா அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் நெடுஞ்சாலையில் பயங்கரமான கார் விபத்திற்குள்ளானார். அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சையில் ஈடுபட்ட வந்த அவர் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார்.
அதனை தொடர்ந்து இந்த வருடத்தில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக கம் பேக் கொடுத்த அவர் இந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டியில் விளையாடி 160.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 371 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும் தேர்வாகி உள்ளார்.
இந்நிலையில், ஜியோ சினிமாவில் ஷிகர் தவான் நடத்தும் நிகழ்ச்சியான ‘தவான் கராங்கே’ வில் (Dhawan Karange), ஷிகர் தவனுடன் விபத்திற்கு பிறகு நடந்த பல கசப்பான நிகழ்வுகளை அவரிடம் மனம் உடைந்து பகிர்ந்துருப்பார். அவர் பேசுகையில், “இந்த விபத்து என் வாழ்க்கையை மாற்றிய ஒரு தருணமாகும்.
விபத்து நடந்த போது நான் நான் உயிருடன் இருப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுள் என்னைக் காப்பற்றி இருக்கிறார். இரண்டு மாதங்கள் பல் துலக்கக்கூட என்னால் முடியவில்லை. ஆறு முதல் ஏழு மாதங்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டேன். வீல் சேரில் ரசிகர்களை காண நான் பதட்டமாக இருந்ததால் என்னால் விமான நிலையத்திற்கு கூட செல்ல முடியவில்லை.
இப்போது நான் கிரிக்கெட்டில் மீண்டும் மெதுவாக திரும்ப வருகிறேன். நான் இப்போது உற்சாகமாக தான் இருக்கிறேன். இது எனக்கு ஒருவகையான 2-வது வாழ்க்கை என்று தான் நான் உணர்கிறேன். அதனால் நான் எந்த அளவுக்கு உற்சாகமாக இருக்கிறேனோ அந்த அளவுக்கு பதட்டமாகவும் இருக்கிறேன்.” என்று கூறி இருந்தார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…