எனது அணிக்காக போட்டியை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.! ரின்கு சிங்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நேற்று (23.11.2023) முதல் டி20 போட்டியானது நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால் மேத்யூ வெயிட் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், முதலில் ஸ்டீவன் ஸ்மித், மத்தேயு ஷார்ட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். மத்தேயு ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோக்ஸ் இங்கிலீஷ் களம் இறங்கி சிறப்பாக விளையாடினார்.
ஹர்பஜன் சிங் அணியை வீழ்த்துமா இர்பான் பதான் அணி.? இன்று நேருக்கு நேர் மோதல்.!
ஒருபுறம் ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் கடந்து ஆட்டமிழக்க, மறுபுறம் ஜோக்ஸ் இங்கிலீஷ் அதிரடி காட்டி அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என பறக்க விட்டு 110 ரன்கள் குவித்தார். முடிவில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி திறம்பட செயல்பட்டு இந்த ஸ்கோரை முறியடித்தது. இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்ததோடு, அணியை முன்னிலைப்படுத்தும் வகையில் ரன்களை அடித்தனர்.
ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ
இதில் இறுதியில் ரிங்கு சிங் நின்று பொறுப்பாக விளையாடி வெற்றி இலக்கை எட்டச் செய்தார். 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வென்றார். முடிவில் இந்தியா 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கடைசி பந்தில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இந்த போட்டிக்குப் பிறகு பேசிய ரிங்கு சிங், “இந்த போட்டியை முடித்து விடவேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால் கடைசி பந்தை அடித்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றேன்” என ரிங்கு சிங் கூறியுள்ளார்.