வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட உத்தரகண்டில் மீட்புப் பணிகளுக்காக என் சம்பளத்தை கொடுக்க விரும்புகிறேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி பணிக்குன்றில் ஒரு பகுதி திடீரென்று நேற்று உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதில் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள நீர் அதிகரித்ததால் நதியின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து இந்திய வீரர் ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உத்தரகண்டில் பனிச்சரிவு உயிரிழப்புகள் என்னை வலியில் ஆழ்த்துகின்றன. மீட்புப் பணிகளுக்காக என் போட்டி சம்பளத்தை கொடுக்க விரும்புகிறேன். மக்களும் இதற்கு முன் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…