ஆர்சிபியை நான் அடிக்கணும்…விராட் கோலி அதை பாக்கணும்..இளம் வீரர் பேச்சு!

virat kohli rcb

விராட் கோலி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மக்களை போலவே, கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட விராட் கோலியின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக விராட் கோலியை பற்றி  பெருமையாக புகழ்ந்து பேசியும் வருகிறார்கள்.

அந்த வகையில், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் கொடுத்த பேட்டி ஒன்றில் விராட் கோலி பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு கிரிக்கெட்டில் பிடித்த வீரர்கள் என்றால் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் என்று கூறுவேன்.

நான் கிரிக்கெட் விளையாடிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவர்களுடைய பேட்டிங்கை பார்த்து தான் வளர்ந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக எனக்கு விராட் கோலி பேட்டிங் ரொம்பவே பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் தீவிர ரசிகனாக இருக்கிறேன். 2023ல், நான் விராட் கோலியை சந்திக்க முடிந்தது என் வாழ்கையில் மறக்க முடியாத நிகழ்வு.

Nitish Reddy and virat
Nitish Reddy and virat [file image]
ஏனென்றால், சிறிய வயதில் இருந்து ஒருவரை பார்த்துக்கொண்டு அவருடைய விளையாட்டை ரசித்துவிட்டு அவரை நேரில் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சியை வாயால் சொல்ல முடியாது. அந்த தருணம் அந்த அளவுக்கு எமோஷனலாக இருந்தது. அவரிடம் பல கேள்விகள் கேட்க முடியவில்லை. எனக்கு இன்னும் ஆசை இருக்கிறது அது என்னவென்றால், விராட் கோலியை சந்தித்து அவரிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கவேண்டும். அதற்கான எதிர்பார்ப்பில் தான் நான் இப்போது இருக்கிறேன்.

அதுவும் சாதாரணமாக வாங்கக்கூடாது. சிறப்பாக விளையாடி அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவேண்டும். வரும் ஆண்டுகளில் நான் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடும் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். நான் சிறப்பாக விளையாடுவதை விராட் கோலி பார்க்கவேண்டும். அவர் பார்க்கவேண்டும் என்பதற்காகவே சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்” எனவும் நிதிஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்