நான் ரிட்டையர் ஆகும் வரை இது நடக்காதென்று நினைத்தேன் ..ஆனால்.. வருத்தம் தெரிவித்த ஜடேஜா!

நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரரான ஜடேஜா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.

Ravindra Jadeja

மும்பை : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் 3-வது மற்றும் கடைசி போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று வான்கடேவில் தொடங்கிய இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸ்க்கு நியூஸிலாந்து அணி 235 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில், இந்தியஅணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்க்டன் சுந்தர் 4 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். அதிலும், ஜடேஜா இந்த 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஜாஹீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முன்னே சென்றுள்ளார்.

அதாவது, சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் ஜடேஜா இருவரையும் பினுக்குத் தள்ளி 5-வது இடத்திற்கு முன்னேறினார். இதனால், நேற்று ஜடேஜா மகிழ்ச்சியாக இருந்தாலும் சற்று வருத்தத்துடனும் இருந்தார்.

மேலும், இதற்கு முன்னதாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஜடேஜா கூறியிருந்தார். நேற்றைய ஆட்டம் முடிந்த போது ஜடேஜா இது குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “தனிப்பட்ட முறையில் நான் ஓய்வு பெறும் வரை இந்திய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காது என்று தான் நினைத்தேன்.

ஆனால் தற்போது அது நடந்து விட்டது.  மேலும், இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி எனக்கு மிகவும் வருத்தமளித்து விட்டது. நாங்கள் எங்களின் மீது பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டோம்.

12 ஆண்டுகளாக எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் விளையாடி வந்த நாங்கள் இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் 5 போட்டியில் மட்டுமே தோற்று இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இப்பொழுது இந்த தொடரில் அடைந்த தோல்வியை எனக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நாங்கள் நிச்சயம் மீண்டும் வருவோம்”, என ஜடேஜா கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்