விராட் கோலியை ஒரு சிறு பிள்ளை என நினைத்தேன் – அக்தர்..!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விராட்கோலி பற்றி கூறியுள்ளார். அதில் பேசிய ஷோயப் அக்தர் விராட் கோலியை கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு விளையாடிய நேரத்தில் அவரை பார்க்கும் போதெல்லாம் நான் மிகவும் சிறிய கிரிக்கெட் வீரர் என்று நான் நினைத்தேன்.
ஆனால் அதற்கு பிறகு திடீரென அவருக்கு இந்திய அணியின் நிர்வாகத்திடம் இருந்து பெரிய ஆதரவு கிடைத்தது. அதனை கோலியும் சரியாக உணர்ந்து கொண்டதால் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
மேலும் இந்த நிலையில் எதிரியின் பலத்தை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆட்டத்தை என்னவென்று நாம் சொல்ல முடியும், மேலும் பாராட்டுதலையும் தெரிவிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.