ஆட்ட நாயகனாக இவர்தான் இருப்பார் என்று நினைத்தேன் – காட்டடி மன்னன்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்டியா தட்டிச்சென்றார். 

இன்று சிட்னியில் நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஒவரில் 194 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில், 42 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதனைத்தொடர்ந்து, ஆட்டநாயகன் விருது ஹர்திக் பாண்டியாக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், நான் ஸ்கோர்போர்டைப் பார்த்து விளையாட விரும்புகிறேன். இதனால் எந்த பந்து வீச்சாளர்களை குறிவைப்பது என்று எனக்குத் தெரியும்.

நான் இந்த சூழ்நிலைகளில் பலமுறை இருந்திருக்கிறேன். கடந்த காலங்களில் நான் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டேன். எனது விளையாட்டு எப்போதுமே நான் சுமக்கும் நம்பிக்கையைச் சுற்றியே இருக்கிறது. நாங்க பெரிய ரன்களை சேஸ் செய்யும் போது நேரங்களை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். டி20-களில் நீங்கள் நினைப்பதை விட அதிக நேரம் இருக்கிறது.

எங்களுக்கு 30 பந்துகளில் 70-80 தேவைப்பட்டால், நான் அதை 12 பந்துகளாக நினைத்து இறுதி முடிவை விட செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்துகிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். நடராஜனும் சிறப்பாக செயல்பட்டார். அவர் ஆட்ட நாயகனாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.  ஏனென்றால், நடராஜனை தவிர மற்ற பந்துவீச்சாளர்களுக்கு இந்த போட்டி சாதகமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

1 hour ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

3 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

3 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

3 hours ago

சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…

5 hours ago

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…

5 hours ago