“ரஸலை அவுட்டாக்கியது கண்கட்டு வித்தை என்று நினைக்கிறன்” -கவுதம் கம்பிர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, ரஸலை அவுட்டாக்கியது கண்கட்டு வித்தை என்று நினைப்பதாக கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, தனது ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் தீபக் சஹர், 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
மேலும், இந்த போட்டியில் தொடக்கத்திலே கொல்கத்தா அணி விக்கெட்களை இழந்த நிலையில், ரஸல் களமிறங்கினார். அவருடன் தினேஷ் கார்த்திக் இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். அதன்பின் சாம் கரண் வீசிய ஓவரில் 30 ரன்கள் அடித்தனர். அவரையடுத்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச, அவர் வைடு ஆஃப் ஸ்டம்பை நோக்கி வீசினார். இதனால் ரஸல், அடுத்த வரக்கூடிய பந்துகள் அவ்வாறு வரும் என்று எண்ணி, ஆட ஆரமித்தார்.
அவரையடுத்து மீண்டும் சாம் கரண் வீச, ஆஃப் சைடில் பீல்டிங் நெருக்கப்பட்டது, இதனால் சாம் கரன் வைடு ஆஃப் ஸ்டம்பில்தான் வீசுவார் என்று ரஸல் தீர்மானித்த நிலையில், ஆஃப் சைடில் ஒதுங்கி நின்று, அந்த பந்தை ஆட முயற்சித்தார். ஆனால் பந்தொ, லெக் ஸ்டம்புக்கு நேராக வந்தது. அதனை தவறாக வைடு என நினைத்து பந்தை விட்டார். அது நேரடியாக ஸ்டம்ப்பில் பட்டு, போல்ட் ஆகி ரஸல் வெளியேறினார். இந்த நிகழ்வு, ரசிகர்களுக்கு கறி விருந்தாக அமைந்தது.
இதுகுறித்து ரசிகர்கள் பலரை தோனி மற்றும் சாம் கரணை பாராட்டி வரும் நிலயில், இந்திய கிரிக்கெட் அணியின் ம் உன்னால் வீரர் கவுதம் கம்பிரும் பாராட்டினார். இதுகுறித்து ESPN ஊடகத்தில் பேசிய அவர், “ரஸல் அவுட்டாக்கப்பட்ட விதம், ஒரு கண்கட்டு வித்தை என்று நினைக்கிறன்.ஏனெனில் சாம் கரண் வைடு ஆஃப் திசையில் பந்தை வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக ரஸலும் தயாராக இருந்தார். அதற்கு காரணம், அதற்கு முந்தைய ஓவரில் ஷர்துல் தாகூர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசினார்.
இதனால் சாம் கரண், லெக் ஸ்டம்பை நோக்கி வீசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரஸல், அந்த பந்து வைட் என நினைத்து விட்டார். ஆனால் அந்த பந்து, ஸ்டம்ப்பில் அடித்தது. இதனால் ரஸல் தனது விக்கெட்டை இழந்தார். அதே வேகத்தில் ரஸல் ஆடினால், இன்னும் 4-5 ஓவர்கள் ஆடி அணியை வெற்றிபெற வைத்திருப்பார்.”
மேலும், ரஸல் களத்தில் இருக்கும்வரை ஸ்பின் பவுலர்களுக்கு ஓவர் தரமாட்டார் என்பது தோனிக்கு நன்றாக தெரியும் என்று கூறிய கம்பிர், ரஸல் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் செல்லும்போது சதம் அடிக்கும் வாய்ப்பையும், அணியை வெற்றிப்பெற செய்யும் வாய்ப்பையும் இழந்த காரணத்தினால் ரஸல் வருத்தப்பட்டார் என்றும், சாம் கரண் வீசிய அந்த பந்தை ரஸல் தடுத்திருந்தால் கொல்கத்தா நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் என்றும் கம்பிர் தெரிவித்துள்ளார்.