இந்த ஐபிஎல் வெற்றியை தல தோனிக்கு சமர்ப்பிக்கிறேன் … ஜடேஜா நெகிழ்ச்சி.!

JadejaAboutDhoni

ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஜடேஜா, இந்த சிறப்பான வெற்றியை நான் தோனிக்கு சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார்.

CSK Champion 2023
CSK Champion 2023 [Image-Twitter/@CSK]

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ரிசர்வ் டே இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூயிஸ் முறை பின்பற்றப்பட்டது. இதன்படி முதலில் பேட் செய்து 214 ரன்கள் குவித்த குஜராத் அணியின் ஸ்கோர், மழைக்கு பின் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Rutu-ConwayStart
Rutu-ConwayStart [Image-Twitter/@CSK]

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் ருதுராஜ் மற்றும் கான்வே அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். சிறப்பாக விளையாடிய கான்வே(47 ரன்கள்) மற்றும் ருதுராஜ்(26 ரன்கள்) குவித்தனர். அதன்பிறகு பேட் செய்யவந்த வீரர்களும் தங்களது பங்கிற்கு அதிரடியாக விளையாட சென்னை அணியின் வெற்றிப்பாதை கடைசிக்கட்டம் வரை நெருங்கியது.

CSK Final
CSK Final [Image- Twitter/@CSK]

டுபே(32 ரன்கள்) மற்றும் ரஹானே(27 ரன்கள்) குவித்து விக்கெட்டை இழக்க, ஆட்டத்தில் தொற்றிய பரபரப்பை ராயுடு சில சிக்ஸர்கள் அடித்து, சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா ஆட்டத்தை இறுதி வரை கொண்டுசென்று, கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து வெற்றி பெறச்செய்தார்.

Jaddu six
Jaddu six [Image- Twitter/@IPL]

இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் 10 ரன்கள் அடித்து உதவிய ஜடேஜா, போட்டிக்கு பிறகு தோனியை நோக்கி ஓட, அன்பின் நெகிழ்ச்சியில் ஜடேஜாவைக் கட்டியணைத்து தோனி தூக்கிவிட்டார். இதற்கு பின் பேசிய ஜடேஜா இந்த வெற்றியை அணியில் சிறப்பான மனிதருக்கு சமர்ப்பிக்கிறேன், தல தோனிக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாக ஜடேஜா கூறினார்.

Dhoni lifts Jaddu
Dhoni lifts Jaddu [Image- Twitter/@CSK]

ஏற்கனவே தோனி மற்றும் ஜடேஜா இருவருக்கும் இடையே சிறு மனஸ்தாபம் இருப்பதாக தகவல் வெளியானது, இருந்தும் ஜடேஜாவை தோனி கட்டியணைத்தது மற்றும் வெற்றியை ஜடேஜா, தோனிக்கு சமர்ப்பிப்பதாக கூறியதும் தற்போது இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது போல் அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்