நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடித்த முதல் அரைசதத்தை அவர் மகள் வாமிகாவிற்கு அர்பணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் விராட் கோலி 51வது ரன் எடுத்தபொழுது, ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 6,000 கடந்தது. மேலும் 6,000 ரன்கள கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
நடப்பாண்டில் விராட் கோலிக்கு முதல் அரைசதம் என்பதால் அரைசதத்தை கடந்த பெவிலியனில் இருந்த அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி கையசைத்து காட்டி முத்தம் கொடுத்தார். அதோடு கையை குழந்தை வாமிகாவிற்கு இந்த அரைசதம் சமர்பணம் என்பது போலவும் சைகை செய்தார். அதற்கான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…