16-வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில், முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடியது என்றே கூறலாம். ஆம் ஹைதராபாத் அணியின் வீரர் ஹாரி ப்ரூக்கின் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார்.
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய ஹாரி ப்ரூக்கின்” நான் இதற்கு முன்னதாக விளையாடிய மூன்று ஆட்டங்களில் சரியாக ஸ்கோர் செய்ய முடியாமல். முதல் சில ஆட்டங்களுக்குப் பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை சரியாக ஆட வேண்டும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவாக்கி கொண்டேன்.
எனக்கு இந்திய ரசிகர்கள் பலர் உள்ளனர். அவர்கள் நான் சில ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை என்பதால் சமூகவலைதளங்களில் என்னை மோசமாக விமர்சித்து வந்தனர். ஆனால், இன்று என்னை அவர்கள் பாராட்டியுள்ளனர்.
நல்லவேளை நான் என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர்களின் வாயை அடைத்தேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…