இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மாக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து அனைவர்க்கும் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில், இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் இந்திய அணிக்காக சிறப்பான ஆடி, பல சாதனைகள் படைத்த கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் பெயரை தேர்வு செய்வதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் அவரின் பெயர் இருந்தது.
அவருடன் சேர்ந்து, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து வீரர்களுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும்
இந்நிலையில் இந்த விருதை பெற்ற ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் அனைவர்க்கும் நன்றி இன்னும் பல பரிசுகளை நாட்டிற்கு கொண்டு வருவதாக நான் உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…