Pat Cummins [file image ]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணம் குறித்து பேசி இருந்தார்.
ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் நேற்று மோதியது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை குறித்து போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “இந்த பிட்ச் வித்யாசமான மண்ணை கொண்ட மைதானம் என்பதால் பந்தின் வேகத்தைக் குறைத்து. மேலும், எங்களுக்கு இந்த பிட்ச்சானது சாதகமாகச் செயல்பட்டது. மேலும், ஷிவம் துபே சுழல் பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக அடித்ததால், நாங்கள் எங்கள் வேக பந்து தாக்குதலுக்கு தயாரானோம்.
எங்களுக்கு இந்த போட்டிகளில் 2 புள்ளிகளைப் பெறுவது முக்கியமானது. எங்கள் அணியின் அபிஷேக் சர்மா பேட் செய்வதைப் பார்ப்பது ஒருவித மகிழ்ச்சி அளித்தது. அவரது பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக அமைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் அவரை சுதந்திரமாக விளையாட ஊக்குவிக்கிறோம். அவரது பவர் பிளே அதிரடி ஆட்டம் தான் நாங்கள் வெற்றி பெற முதல் காரணமாக பார்க்கிறேன்.
அதன் பிறகு குறிப்பாக எம்.எஸ்.தோனி மைதானத்திற்குள் வரும் போது எழுந்த சத்தம் நான் இது வரை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. மேலும், இன்னும் ஐந்து ஆட்டங்கள் எங்களுக்கு இதே ஹைதராபாத் மைதானத்தில் இருப்பதால், நாங்கள் அந்த 5 போட்டிகளையும் வெற்றி பெரும் முனைப்பில் இருக்கிறோம், ” என்று நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…