ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை விராட் கோலியிடம் காண்பித்த ரசிகர்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்தன. 195 ரன் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனிடையே, இந்திய அணி பந்துவீசும் போது பில்டிங்கில் நின்று கொண்டிருந்த கேப்டன் கோலியிடம் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை ரசிகர்கள் காண்பித்தனர். அதற்கு சிரித்துக் கொண்டே Me too என பதிலளித்துள்ளார் விராட் கோலி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் தோனியை pride of nation என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதுபோன்று தவான் 39 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். ஆனால், ரிப்ளேவில் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்யூ வேட் தாவனிடம், நான் தோனி அல்ல, தோனி அளவுக்கு வேகம் இல்லை என கூறினார். இவர்கள் பேசும் ஆடியோ ஸ்டெம்பில் இருந்த மேக்கில் பதிவாகியது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…