பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோனியின் ஆட்டத்தை மீண்டும் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாக பதிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் மேலும், உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்த தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
மேலும் அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் எனவும், ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறினார். இந்நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்தது இது ரசிகர்களின் மனதில் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் அணைத்து ரசிகர்களும் தோனி ஆட்டத்திற்காக காத்துள்ளார்கள் என்றே கூறலாம், அந்த வகையில் பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார் ,அந்த பதிவில் தோனியின் ஆட்டத்தை மீண்டும் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாக பதிவு செய்துள்ளார்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…