எனக்கு தெரியும் என்னைப்பற்றி… பைனலில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்த அஷ்வின்.!

Ashwin

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தன்னை எடுக்காதது குறித்து அஷ்வின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

லண்டன் ஓவலில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

Aus WTC
Aus WTC [Image- Twitter/@ICC]

இதில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. சச்சின் உட்பட பல்வேறு முன்னாள் கிரிக்கெட்டர்கள் அஷ்வின் அணியில் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அஷ்வின் அணியில் இடம் பெறாதது தான் என்று கூறி வருகின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் பல இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்த நிலையில் அஷ்வின் அவர்களுக்கு எதிராக நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.

Ind WTC Final
Ind WTC Final [Image-Twitter/@BCCI]

ஸ்போர்ட்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அஷ்வின் கூறியதாவது, டெஸ்ட் உலகக் கோப்பை பைனலில் விளையாட வேண்டும் என்று தான் நானும் விரும்பினேன். ஆனால் இதற்கு பதில் சொல்வது கொஞ்சம் கடினமான ஒன்றுதான், நாம் டெஸ்ட் உலக கோப்பை பைனல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் தற்போது இதனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

வெளிநாட்டு மைதானங்களில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்துள்ளது, கடந்த 2018-19 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட என்னுடைய ஆட்டத்திறன்  அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஏன் கடந்த முறை 2021 டெஸ்ட் ஒரு கோப்பை பைனலில் கூட நான் நான்கு விக்கெட் வீழ்த்தி இருந்தேன்.

கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் கூட இந்திய அணி டெஸ்ட் தொடரில் 2-2 என்று டிரா செய்து இருந்தது, அப்பொழுதும் கூட நான்கு வேகப்பந்துவீச்சாளருக்குமற்றும் ஒரு ஸ்பின்னர் உடன் இந்திய அணி களம் இறங்கியது, இது தான் அவர்களது எண்ணமாக இருந்துள்ளது. ஆனால் ஸ்பின்னர் அணியில் விளையாடும் பொழுது அது நான்காவது இன்னிங்ஸில் மிகவும் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Ashwin test1
Ashwin test1 [Image-Twitter/@BCCI]

எனக்கு மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவலை இல்லை. எனக்கு என்னைப் பற்றி தெரியும் நான் எப்படி விளையாடுகிறேன், என்று. நான் நன்றாக விளையாடவில்லை என்றால் என்னை பற்றி விமர்சிக்கும் முதல் ஆளாக நானாகத்தான் இருப்பேன் மற்றவர்கள் என்னை மதிப்பிடுவது சுத்த முட்டாள்தனம் என்று அஷ்வின் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்