“SRH பேமிலியை நான் ரொம்ப மிஸ் பன்றேன்.. என்ன சொல்லனு தெரியல”- நடராஜன் உருக்கம்!

Default Image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதகாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு பதிலாக அணியில் கலீல் அஹமதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடராஜன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ள வீடியோவில், ” எனக்கு முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறேன். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினேன். இந்தாண்டு இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் நிலையில், விளையாட ரொம்ப எதிர்பாத்து கொண்டிருந்தேன்.

ஆனால் எனக்கு முழங்காலில் அறுவைசிகிச்சை மேற்கொள்ள உள்ளனர். இதனால் இந்த சீசனில் விளையாட முடியாது. நான் SRH பேமிலியை நான் ரொம்ப மிஸ் பன்றேன்.. என்ன சொல்லனு தெரியல”. என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடராஜன் இல்லாதது, ஹைதராபாத் அணிக்கு பின்னடைவாக இருக்கும். அதுமட்டுமின்றி, நடராஜன் விரைவில் குணமடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்