எனக்கு விருது தரவில்லை.. கிரிக்கெட் கரியரின் கடைசி கட்டம் – சிஎஸ்கே கேப்டன் ஓபன் டாக்

Default Image

ஐபிஎல் வரலாற்றில் 200 முறை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார் எம்எஸ் தோனி. 

ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், சென்னை அணியின் சூழலில் விக்கட்டுகளை பறிகொடுத்தனர்.

சென்னை அணி வெற்றி:

இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஐதராபாத் அணி. எனவே, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய சென்னை தொடக்க வீரர்கள் ருதுராஜ், கான்வே சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் ஒரு சில விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் கான்வே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை காலத்தில் நின்று வெற்றியை தேடி தந்தார்.

டெவோன் கான்வே அதிரடி:

சென்னை அணி 18.4 ஓவரில் 138 ரன்கள் அடித்து 7 விக்கெட்டு வித்தியாசத்தில் 4வது வெற்றியை பதிவு செய்தது. சேப்பாக்கத்தில் 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2 போட்டிகளில் சென்னை வெற்றியை ருசித்துள்ளது. இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முண்ட்ட்ரவது இடத்தில உள்ளது. இப்போட்டியில் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 57 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தார்.

கடைசி கட்டம் – தோனி நெகிழ்ச்சி:

ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். மேலும், இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே முக்கியம். சேப்பாக்கத்தில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பை கொடுத்திருக்கிறார்கள். இப்பொது கூட நான் பேசுவதை கேட்க நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

எனக்கு வயதாகிவிட்டது:

மேலும், வயதாகும்போது தான் அனுபவம் வரும். சச்சின் டெண்டுல்கர் 16, 17 வயதிலேயே விளையாட தொடங்கிவிட்டதால், அவருக்கு மட்டும் இளம் வயதிலேயே அனுபவம் வந்துவிட்டது. எனக்கு வயதாகிவிட்டது, அதை மறைக்க முடியாது என தொடர்ந்து அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்து வருகிறீர்கள் என கிரிக்கெட் வர்ணனையாளர் கூறியதற்கு தோனி பதில் அளித்தார்.

விருது தரவில்லை – சாதனை:

மேலும், இன்று நான் பிடித்த கீப்பிங் கேட்ச், சிறந்தது என நினைக்கிறன். ஆனால், அதற்காக எனக்கு விருது தரவில்லை, கையுறை அணிந்திருப்பதால் கேட்ச் பிடிப்பது சுலபம் என்று நினைக்கிறார்கள் என தோணி கிண்டலாக பேசினார். இதனிடையே, ஐபிஎஸ் வரலாற்றில், கேட்ச், ஸ்டெம்பிங் என மொத்தம் 200 முறை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார் எம்எஸ் தோனி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer