விராட் கோலியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை – கிறிஸ் கெயில் புகழாரம்.!

Virat Kohli Chris gayle

IPL 2024:  நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.

எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது, விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுவார் என்று ‘ பாஸ் ஆப் ஐபிஎல்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் அவரது கருத்தை கூறி இருக்கிறார் .

READ MORE – ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்!

அவர் பேசுகையில், “சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) 50 சதங்களுக்கு மேல் அடித்த வீரராக கோலி இருக்கிறார்.

தற்போது, 35 வயதான அவருக்கு இன்னும் எல்லா ஃபார்மேட்களிலும் விளையாடுவதற்கு நிறைய வருடங்கள் இருக்கிறது. அவர்கள் இருவரையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் கூட இல்லை” என்று கிரிக்பஸ்ஸிடம் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

READ MORE – IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த 5-வது தமிழ் வீரர்..! யார் தெரியுமா?

ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சி.எஸ்.கே 20 முறையும், ஆர்.சி.பி 10 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி ‘ட்ரா’ ஆனது. இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்