ரஹானே இவ்வளவு சிறப்பாக விளையாடுவதை நான் பார்த்ததில்லை…ஏபி டி வில்லியர்ஸ் புகழாரம்.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானேவின் ஆட்டமிழக்காமல் அருமையாக ஆடி வருவதை பற்றி தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “ரஹானே இவ்வளவு சிறப்பாக நகர்வதை நான் பார்த்ததில்லை”. “அருமையாக பொறுமையாக விளையாடுகிறார். என டி வில்லியர்ஸ் கூறினார். மேலும், 3 வது நாள் ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆட்டம் தொடங்கப்பட்டு பரத் பேட்டிங் செய்துகொண்டிருந்த நிலையில், தற்போது அவர் அவுட் ஆகியுள்ளார்.
அவரை தொடர்ந்து தற்போது ஷர்துல் தாக்கூர் களமிறங்கியுள்ளார். மற்றோரு பக்கத்தில் ரஹானே பொறுமையாக விளையாடி இதுவரை 39 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.