“24 வயதோ, 40 வயதோ.. என்னுடைய பர்பாமன்ஸ் பற்றி உறுதியாக சொல்ல முடியாது”- தல தோனி!
எனக்கு பிட்னஸ் இல்லையென யாரும் சொல்லிவிடக்கூடாது என்றும், 24 வயதோ, 40 வயதோ.. என்னுடைய பர்பாமன்ஸ் பற்றி உறுதியாக சொல்ல முடியாது என்று சென்னை அணியின் கேப்டன் தல தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தனர். 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சென்னையின் ஸ்பின் பந்துவீச்சில் திணறி, 9 விக்கெட்டை பறிகொடுத்து 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியின் மூலம் சென்னை அணி, தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது. மேலும் இந்த போட்டியில் ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க 39 வயதான தல தோனி, டைவ் அடித்து க்ரீஸை எட்டினார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் விடியோக்கள், வைரலான நிலையில், 2019-ம் ஆண்டில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியுடன் இதனை ஒப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். இதன்மூலம் தோனி, கடந்த சீசனை விட இம்முறை பயங்கர பிட்னஸில் உள்ளதை நிரூபித்தார்.
போட்டியின் முடிவில் தோனியிடம் அவரின் பிட்னஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 24 வயதிலும் சரி, 40 வயதிலும் சரி; என்னுடைய பர்பாமன்ஸ் பற்றி உறுதியாக சொல்ல முடியாது. எனவேதான் ஃபிட்னஸ் விஷயத்தில் நாம் மிக கவனமாக இருக்கின்றேன். என்னை பார்த்து யாரும் இவர் ஒரு அன்பிட் வீரர் என்று சொல்லிவிடக்கூடாது என்று தெரிவித்தார்.
“When you’re playing, you don’t want anyone to say he’s unfit” @msdhoni on being asked upon his fitness ????????#VIVOIPL #CSKvRR pic.twitter.com/AraxlOEsQ0
— IndianPremierLeague (@IPL) April 19, 2021
மேலும், வயதாக ஆக பிட் ஆக இருப்பது மிகவும் கஷ்டம் என்று கூறிய தோனி, அவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் நான் செயல்பட வேண்டும் என்பதற்காகவே எனது பிட்னஸ் விஷயத்தில் கவனமாக இருப்பதாக சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.