ஒண்ணுமே புரியல…என்ன நடந்தது..? விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான் வீரர்…வைரலாகும் வீடியோ.!!
டெர்பிஷயர் அணிக்காக விளையாடும் பாகிஸ்தானின் ஹைதர் அலி, பர்மிங்காமுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் நகைச்சுவையான முறையில் வெளியேற்றப்பட்ட பின்னர் என்ன ஆச்சு என்பது போன்ற ரியாக்ஷன் உடன் சென்றார். 11வது ஓவரின் போது, டேனி பிரிக்ஸின் வீசிய பந்தில் ஹைதர் அலி க்ரீஸை விட்டு வெளியே வந்து அடிக்க முயன்றார்.
ஆனால், அந்த பந்தை தவறவிட்டார். பிறகு, பந்து கீப்பிங் செய்துகொண்டிருந்த அலெக்ஸ் டேவிஸ் கையில் கிடைத்தது. அவர் சும்மா விடுவாரா என்ன..? ஆரம்பத்தில் பந்தை தவறவிட்டாலும், கிரீஸுக்குத் திரும்ப வர முயன்ற ஹைதர் அலியின் விக்கெட்டை அலேக்காக தூக்கினார். பந்து கீப்பர் கையில் இருந்தும் ரன் ஓட முயன்று ஹைதர் அலி அவுட் ஆனார்.
அவுட் ஆன பிறகு ஒன்னுமே புரியல என்கிற அளவிற்கு ஹைதர் அலி பந்து எங்கேயோ சென்றது போல, செய்கை காட்டிவிட்டு மைதானத்தை விட்டு சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ஹைதர் அலியை கலாய்த்து வருகிறார்கள்.
Make sense of this Haider Ali stumping ???? #Blast23 pic.twitter.com/d1iD6t1yMZ
— Vitality Blast (@VitalityBlast) June 7, 2023