இயான் மோர்கன் சிறந்த டி20 கேப்டன் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் கேப்டன்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று முன் தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் கேப்டன்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார். டி20 போட்டிகளுக்கான கேப்டனில் இயான் மோர்கன் சிறந்த கேப்டனாக எனக்கு தெரியவில்லை. ஒருநாள் தொடரில் வேண்டுமானலும் இயான் மோர்கன் சிறந்த கேப்டனாக இருக்கலாம்.
மேலும் டி20, போட்டிகளில் அவர் சிறந்த கேப்டன் கிடையாது. இங்கிலாந்து அணியில் எந்த வீரர் பேட்டிங் செய்தாலும், பவுலிங் செய்தாலும் மோர்கனுக்கு வெற்றி பெற்று தருவார்கள். ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை அப்படி இல்லை. ஐபிஎல்லில் சிறந்த அணியை மோர்கன் அமைக்க வேண்டும். மோர்கன் டி20 போட்டிகளுக்கு சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…