இனி நீங்க தேவை இல்லை ..! பென் ஸ்டோகேஸை ஓரம் கட்டிய இங்கிலாந்து வாரியம் ?
Ben Stokes : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை.
ஐபிஎல் 2024 தொடர் முடிந்த பிறகு ஜூன் – 2 ம் தேதி இந்த ஆண்டிற்கான டி20 உலககோப்பையானது அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கி விடும். இந்த தொடரில் பங்கு பெற உள்ள அணியான இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆல்- ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியில் எடுக்கவில்லை என்று அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்துவதற்காக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். மேலும், அவரை இந்த தொடர்க்கு பரிசீலிக்க வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) யிடம் அவரே கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் அவரை ECB எடுக்கவில்லை என்று தெரிகிறது.
பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு முழங்கால் காயத்துடன் அவதி பட்டு வந்தார் இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்து வீசாமல் இருந்தார். அதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட தன்னை தயார்படுத்திக் கொண்டு அந்த தொடரிலும் விளையாடியினார். அந்த உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு முழங்கால் அறுவை சிகிச்சைக்கு அவர் சென்றார்.
அதன் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவுடனான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கலந்து கொண்டும் விளையாடினார். அந்த தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் தான் பென் ஸ்டோக்ஸ் கடைசியாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடைபெற போகும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தாமாகவே விலகி இருக்கிறார்.